எங்களைப் பற்றி

திருச்சிராப்பள்ளி மாநகர ஆயிர வைசியர் சங்கம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிர வைசியர் குலதிலகம் சொ. அருணாசலம் செட்டியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் திரு சொ. அருணாசலம் செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக “ஆயிர வைசியர் குலதிலகம் சொ. அருணாசலம் செட்டியார் கல்வி அறக்கட்டளை” தொடங்கப்பட்டது. இதன் மூலம் நமது சமூகத்தை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகமும், பாடபுத்தகங்களும் இலவசமாக வழங்கப்படுவதுடன் நிதியுதவியும் செய்யப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு ஜாதகப் பரிவர்த்தனைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆங்கில மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்று திருமதி. அம்மாக்கண்ணு அம்மையார் திருமண மண்டபத்தில் ஜாதகப் பரிவர்த்தனை கடந்த ஏழு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் இதுவரை பதிவு செய்து பயனடைந்துள்ளார்கள்.

தற்சமயம் இத்திட்டத்தால் நாடு முழுவதும் பயன் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வரிய வாய்ப்பை நமது சமூகத்தைச் சார்ந்த அனைவரும் பயன்படுத்திக்கொண்டு உறவுகளை வளர்த்துக் கொள்ளவேண்டுகிறோம்.

Quick Search...

  to  
  Show with Photo